×

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு: 93.46% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தஞ்சாவூா், மே7:தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 93.46 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை 227 பள்ளிகளை சேர்ந்த 12,102 மாணவர்களும், 14 ஆயிரத்து 103 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 205 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதே போல் தனித்தேர்வர்கள் 212 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்தேர்வு 110 மையங்களில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் 11819, மாணவிகள் 13915 என

மொத்தம் 25734 பேர் தேர்வு எழுதினர்.இதில் மாணவர்கள் 10710, மாணவிகள் 13342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை 24,052 ஆகும்.இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 90.62 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் : 95.88 சதவீதமாக உள்ளது. மாணவ, மாணவிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதமாகும்.மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு பிளஸ்2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும். இந்த ஆண்டு அதை விட 1.72 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 104 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 4108 மாணவர்களில் 3468 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 84.42 ஆகும். இதேபோல் மாணவிகளின் 6000 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 626 தேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.77 ஆகும்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு: 93.46% மாணவ, மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,district ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED இளம் சிறார்கள் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 பேர் மீது வழக்கு